தமிழ் மொட்டுக்கள்
Please login to reply/comment to the stories

Join the forum, it's quick and easy

தமிழ் மொட்டுக்கள்
Please login to reply/comment to the stories
தமிழ் மொட்டுக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Aditi
Aditi
New member
New member
Posts : 2
Join date : 2018-12-25

உன் விழியசைவில் நான்  Empty உன் விழியசைவில் நான்

Tue Dec 25, 2018 8:20 pm
[color=#000000][font=Arial Black]


[b]"குள்ள கத்திரிக்கா .. எந்திரிச்சு அந்த பக்கம் போடி ..." என்று அவன் தங்கை தலையில் நறுக்கென்று கொட்டிவிட்டு அவளிடம் இருந்து பறித்தபாப்கார்ன்-உடன் தனக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ் சேனலை வைத்துக்கொண்டு கத்திக்கொண்டு இருந்தான் கிரிஷ் என்கிற கிருஷ்ணன்.

"அண்ணா ப்ளீஸ் குடுன்னா.. நான் பத்து நிமிஷத்துல தந்துடுறேன்.. செம சீன் போயிட்டு இருக்கு அதுல.."

"போடி .. அதெல்லாம் தரமுடியாது.. நானே ஆர்வமா மேட்ச் பாத்துகிட்டு இருக்கேன் .. வந்துட்டா.. ஒரு நாள் சீரியல் பாக்கலைனா என்ன ,"



"நீ ஒரு நாள் மேட்ச் பாக்கலைனா என்ன " என்று நந்தினி ( கிருஷ்ணனின் தங்கை ) அவனது முடியை பிடித்து ஆட்ட,"ஏய் விடு டி.." என்று இருவரும் சண்டை போட, டிவி ரிமோட் கீழே விழுந்து உடைந்தது. அது உடைந்தவுடன் , " என்ன அங்க சத்தம் .. எத போட்டு உடைச்சீங்க ?" என்று ஒரு குரல் வீட்டின் சமையல் அறையில் இருந்து வெளிப்பட, அண்னன் தங்கை இருவரும் அமைதியாகி புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கச் தொடங்கினார்கள்.சமையல் அறையில் இருந்து வெளியே வந்த அவர்களின் அம்மா லட்சமி , இருவரையும் பார்த்துவிட்டு , கீழேவிழுந்த ரிமோட்டையும் பார்த்துவிட்டு இருவரையும் முறைக்க தொடங்கினார்கள்.கிருஷ்ணன் : அவதான் மா உடைச்சா,. நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருக்கேன்.. என்று கூற மீண்டும் முறைக்க ஆரம்பித்தார். முறைக்குற முறைப்புல கண்ணு ரெண்டு வெளில வந்துடும் போலயே என்று மெதுவாக கூற , தோசைக்கரண்டி பறந்துவந்து அவனது முதுகில் தாளம் போட்டது." அம்மா விடுமா .. " என்ற அலறலுடன் வெளியே ஓட, அதைப்பார்த்து நந்தினி சிரித்துக்கொண்டு இருந்தாள்.. அவளுக்கும் முதுகு வீக்கம் வரும் அளவிற்கு தோசைக்கரண்டியால் தாளம் போட்டார் லட்சு என்கிற லட்சமி,.அவர் உள்ளே சென்றதும் , கிரிஷ் உள்ளெ வர , இதெல்லாம் சகஜம் .. இன்னிக்கு கொஞ்சம் கம்மி என்று இருவரும் அமைதியாக ஷின்-சான் பார்க்க தொடங்கினார்கள்.இது தான் ஹீரோவோட வாழ்க்கை.. எந்த விஷயத்தையும் லேசா எடுத்துக்குவாரு. சரியான விளையாட்டுப்பிள்ளை..

திரு. ராமசந்திரன் மற்றும் திருமதி. லட்சமி ராமசந்திரன் இவர்களின் அருமை புதல்வன் க்ரிஷ் என்கிற கிருஷ்ணன் . அருமை புதல்வி நந்தினி ..



எல்லாரும் சென்னைல அவங்க சொந்த வீட்டுல இருக்காங்க.

ராமசந்திரன் - ஒரு பேங்க்ல மேனேஜ்ரா இருக்காரு. குடும்பம் - ஆபீஸ் இதுதான் இவருக்கு வேலை..

லட்சு - ராமச்சந்திர இல்லத்துக்கு மேனேஜ்ரா இருக்காரு.விடுமுறை நாட்களில் வீட்டு வேலைகளை விட , தான் பெற்ற இரண்டு வாலில்லா குரங்குகளை மேய்க்கவே அவர்க்கு நேரம்போதவில்லை. எல்லாரும் ஆபீஸ், காலேஜ் சென்று விட்டால் , தனக்கு தெரிந்த கலையார்வத்தை வளர்த்துக்கொள்வார்.. தையல் , சமையல் , கிராப்ட் வேலைகள் என பொழுதை போக்கிக்கொள்வார்..

கிரிஷ் - இன்ஜினியரிங் முடிச்சுட்டு , ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறான். வீடு - ஆபீஸ் - நண்பர்கள் - சனிக்கிழமை நைட் சரக்கு, என வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்துகொண்டுஇருக்கும் இவன் , பொண்ணுகளை சைட் அடிக்கிறதோட சரி.. லவ்ல விழுந்துடமாட்டான். இவனோட காலேஜ் ,ஆபீஸ்ல வந்த ப்ரோபோசல் எல்லாத்தையும் முகத்துக்கு நேர பிடிக்கலை என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவான், அதோடு அதை மறந்துவிடுவான்.

நந்தினி - இப்போதான் மேடம் கேட்டரிங் படிப்பை முடிச்சுட்டு வீட்டுல இருக்காங்க.. தனியா கேட்டரிங்/ஹோட்டல் சேவை பண்ணனும் . அதுதான் இவங்க ஆசை.. அதுக்கான முயற்சியை அவளும் அவளது நண்பர்களும் எடுத்துக்கொண்டு இருக்கிறாங்க.





கிரிஷ்க்கு கல்யாண வயசு வந்துட்டதால , அவனுக்கு பொண்ணு பாக்க மேட்ரிமோனியல் சைட்ல அவனோட ப்ரொபைல் கொடுக்கறாங்க..லட்சுக்கு இது இன்னொரு வேலை ..லட்சு , எல்லாத்தையும் சைட்ல தெளிவா போட்டுவிட்டு , ஒரு கேள்விக்கு மட்டும் கிரிஷ் முடிவை எதிர்பார்க்குறாங்க.

"டேய் வளந்து கெட்டவனே.., எல்லா டேட்டாவையும் அப்டேட் பண்ணிட்டேன். நீ பார்த்துட்டு , உனக்கு எப்படி பொண்ணு வேணும்னு சொல்லு , அதே மாறி இதுல தேடிப்பார்க்கலாம்"

"லட்சு , உனக்கு வாய் ஜாஸ்தியாகிடுச்சு ..நான் வளந்து கெட்டவன்னா, நீ வளர வச்ச கெட்டவள் " என்று கூற , அவர் முறைக்கவும் ," ஆனா உன்னா.. முறைக்க வேண்டியது...எதுக்கும் நாம தள்ளியே நிப்போம் .. சொல்லமுடியாது ..ஆத்தா கோவம் வந்த சிஸ்டம்ம தலைல தூக்கி போட்டாலும் போட்டுடும்" என்று மனதிற்குள் கூறுவதுபோல வெளியே சத்தமாக கூற , அதை கேட்ட லட்சு , அருகில் இருந்த ஸ்கேலை எடுக்க , அதை பார்த்துவிட்டு வீடு பெருகிக்கொண்டு இருந்த நந்தினி , ," அம்மா .. இத வச்சுக்கோ " என்று தன்னுடைய கையில் இருந்த துடைப்பத்தை தர , " ஆத்தாடி .. ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க .." என்று வீடு முழுக்க ஓட்டம் எடுத்தான்..

"செவலை தாவு டா .. தாவு" என்று கத்திகொண்டே சோபாவை தாண்டிக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தான்..லட்சுவிற்கு ஓடியதில் மூச்சு வாங்க , நந்தினி சென்று துடைப்பத்தை வாங்க அருகில் சென்றாள்.

இரவு வீடு வர, அனைவரும் பேசி , ஒருவழியாக அவனது ப்ரோபைலை தயார் செய்தனர்..

இதுதாங்க அந்த ப்ரொபைல் :

பெயர் : கிருஷ்ணன் R

வயது : 28

உயரம் : 6 feet

உடல்வாகு : நார்மல்( இன்ன பிற விவரங்கள் )

எதிர்பார்ப்புகள் :

படிப்பு : டிகிரி completed ( நந்தினி கமெண்ட் : ஏன் கம்ப்ளீட் பன்னுலென கல்யாணம் பண்ணமாட்டியா?)

வயது : 21 - 26

பெண்ணின் உயரம் : 5 .5 - 5 .8 ( நந்தினி கமெண்ட் : சுத்தம் பொண்ணே கிடைக்காது ..)



உடல்வாகு : நார்மல்

வேலைக்கு போகலாம் , போகாமலும் இருக்கலாம் அது பெண்ணின் விருப்பத்தை பொறுத்தது. ( நந்தினி கமெண்ட் : அதே அவளே முடிவு பண்ணிக்குவாங்க .. இவரு பெரிய தாராள மனசுக்காரரு ... உத்தரவு தாரரு..)



நல்ல குடும்பத்து பெண்ணாக , சென்னையில் இல்லாத பிற மாவட்டத்தில் இருந்து , அதுவும் கிராமமாக இருந்தால் இன்னும் நல்லது.அவர்கள் மட்டுமே இந்த எண்ணை அணுகவும்.( நந்தினி கமெண்ட் : கிராமமா.. போட போட.. கொட்டாம்பட்டி , தொப்பம்பட்டி அங்க போய் அருக்காணியை கல்யாணம் பண்ணிக்கோ. )

அதை நினைத்து பார்க்க , " கொட்டாம் பாக்கும் ,கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் ... மச்சான் நீயும் ,மச்சினி நானும் போட்டா தூள் பறக்கும் ..." என்ற தனுஷ் - ஆர்த்தி காமெடியை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தாள்..லட்சு அவளை கேட்க , அவளும் அபிநயத்துடன் அதை சொல்லிவிட்டு சிரிக்க , அனைவரும் சிரித்துக்கொண்டு இருந்தனர்..

கிரிஷ் அவளை அடிக்க , அவள் சிரித்துக்கொண்டே .. " மாமா எனக்கு வெக்க வெக்கமா வருது " என்று நடித்துக்காட்ட , கிரிஷ் , " பாக்கலாம்டி .. ஒரு சூப்பர் பிகர் நான் சொன்ன மாறி என்னை தேடி வரும் . நாங்க கல்யாணம் முடிஞ்சு , ஜாலியா இருப்போம் .. " என்று சவால் விட்டான்..

சவால்ல ஜெயிப்பானா?[/b][/font][/color]
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum