தமிழ் மொட்டுக்கள்
Please login to reply/comment to the stories

Join the forum, it's quick and easy

தமிழ் மொட்டுக்கள்
Please login to reply/comment to the stories
தமிழ் மொட்டுக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
avatar
SaraThas
New member
New member
Posts : 8
Join date : 2018-12-23

உள்ளம் கொள்ளை போகுதடா - உள்ளம் 1 Empty உள்ளம் கொள்ளை போகுதடா - உள்ளம் 1

Mon Dec 24, 2018 11:59 am

பனாரஸிற்கு அருகில் உள்ள சிறியக்கிராமம், அதில் பனாரஸ் போன்றே கோவில்களும் , பூசாரிகளும் வேதம் அறிந்த வித்வன்களும் வசித்துவந்தனர்..

அதிகாலை நேரம் , சிவனிற்கு பூஜை செய்ய , கங்கையின் நதியின் நீரை எடுத்து மந்திரங்கள் ஓத , அந்த புனித நீரில் குளித்துவிட்டு , சிவனிற்கு பூஜை செய்ய சென்று கொண்டு இருந்தாள்..

அதேநேரம் , " வித்யா... வித்யா ..." என்று ஹேமா கத்திக்கொண்டு இருந்தாள். கௌசல்யா ஹேமாவிற்கு காபி கொண்டு வந்து தர , அவள் வித்யாவை திட்டிக்கொண்டு இருந்தாள்.

கௌசல்யா ," வித்யா பூஜைக்கு போயிருக்கிறாள் .. வந்துவிடுவாள்"

அவளுடைய அப்பா மணி , அந்த ஊரிற்காக உயிரைவிட , அவளும் அவளது தாய் கௌசல்யாவும் தனியாய் இருக்க , மணியின் தம்பி ராஜசேகர் , அவரது மனைவி ஹேமா மற்றும் அவளது மகள் ஷாலினி மூவரும் அண்ணனின் வீட்டிற்கு வந்து அங்கேயே அமர்ந்து அவர்களது வருமானத்தில் வாழ்ந்துகொண்டு இருந்தனர். அனைத்து சொத்துக்களையும் தன்னுடைய பெயரில் மாற்றிக்கொண்டு அவர்களை வேலைக்காரர்கள் போல நடத்த , தங்களுக்கு வேறு வழியின்றி அமைதியாய் அவர்கள் போக்கிலே இருந்தனர்.

வித்யா , அழகு ,பொறுமை ,சகிப்புத்தன்மை , அன்பு நிறைந்த பெண். அவளுக்கு எல்லாமே அவள் அம்மா மட்டும்தான். அவள் அம்மாவிற்கு ஒரே ஆசை லட்சியம் எல்லாமே ஒன்றுதான். வித்யாவிற்கு நல்லபடியாக கல்யாணம் செய்வது. அவள் சந்தோசமாக வாழ்வதை பார்த்துவிட்டு தான் சாகவேண்டும் என்று உறுதியாய் இருக்கிறார்.

வித்யா , வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அவள் இளைப்பாறும் இடமே கோவில் தான். அவளுக்கு மிகவும் பிடித்த இடம் கோவில். அதுவும் அவள் சிவனிடத்து மிகுந்த பக்தி கொண்டவள். தவறாமல் பூஜை செய்வது , விரதம் இருப்பது , கோவிலுக்கு தன்னால் ஆன எல்லாவற்றையும் செய்வாள். அங்கே உள்ள பூசாரி , அவளை எப்போதும் வாழ்த்துவார்.

"உன்னுடைய மனசுக்கு நீ நல்ல இருக்கனும் " என்று கூறுவார்.

ராஜசேகர் , தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரண்மனையின் வீட்டிற்கு ஆட்கள் வருவதை அறிந்துகொண்டு அங்கே சென்று அவர்களை வரவேற்க , காத்துஇருந்தார். அவர்கள் வந்ததும் , அவர்களை நலம் விசாரித்து உள்ளே அழைத்து சென்றார்.

அந்த ஊரின் தலைமை பூசாரியை அழைத்து வந்து , இந்த ஊரில் தான் என்னுடைய மகனிற்கு பெண் பார்க்க வந்துஇருக்கேன். இந்த ஊரில் உள்ள திருமண வயதில் உள்ள அனைத்து பெண்களின் தகவல்களை நீங்கள் சேகரித்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறிவிட, அவரும் அதன் வேலையை தொடங்கினார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த ராஜசேகர் , ஓடிச்சென்று தனது மனைவி ஹேமா, மகள் ஷாலு விடம் கூற, கௌசல்யாவும் அதைக்கேட்டு சந்தோசப்பட, " நீ எதுக்கு இவ்ளோ சந்தோஷமாகுற , உன்னோட தற்குறி பொண்ணு அங்க போகமாட்டா "

கௌசல்யா ," என்னோட பொண்ணுக்கு என்ன குறை .. அவள்மாறி அழகு , பொறுமை இதெல்லாம் கிடைக்க அவங்க குடுத்துவச்சு இருக்கனும் "

"எதுக்கு உன்னோட படிக்காத அறிவில்லாத பொண்ணை , அரண்மனை வீடு ஆளுங்க திரும்பி கூட பார்க்கமாட்டாங்க .."

"அவளுக்கு இருக்க குணத்துக்கு , அவங்களே வந்து பொண்ணு கேப்பாங்க "

"வருவாங்க வருவாங்க ... விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டுனதுபோல , இவளுக்கு அரண்மனை சுகம் கேட்குதோ . ஷாலு , அதை கொடு " என்று ஒரு மூட்டை துணியை குடுத்து ஊருக்கு வெளியே இருக்க ஆற்றங்கரையில் போய் துவைத்து வரச்சொன்னாள்.

வித்யாவும் அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவள்

துவைத்துக்கொண்டு இருக்கும்போது , ஒரு துணி நழுவி நீரில் மிதந்து செல்ல, அதை பிடிக்க சென்றாள்.

அப்போது அவள் மீது தண்ணீர் துளிகள் விழ, அதே நீரில் இருந்து அவன் எழுந்து மீண்டும் வித்யாவின் மீது தண்ணீரை எடுத்து அடித்தான். வித்யாவும் அவனது கண்களை கண்டு மெய்மறந்து நிற்க , அந்த துணியை அவளிடம் இருந்து இழுத்தான்.

அவளோ அதை இறுக்கமாக பற்றிக்கொண்டு இருக்க, அவன் சிரித்துவிட்டு , அவளிடமிருந்து அதை வாங்கிக்கொண்டு நீந்தி உள்ளே சென்றான்.

அவனது டிரைவர், அங்கே வந்து "சாகர் சார் .. அரண்மனையில் கூப்பிடுறாங்க " என்று அழைக்க , அவன் கேட்காமல் நீந்தி சென்று கொண்டு இருந்தான்.

அவனது நினைவில் , தனது வேலைகளை முடித்துக்கொண்டு ,கோவில் செல்ல, அங்கே அனைவரும் தனது பெண்ணின் பெயர்களை கொடுத்துக்கொண்டு இருந்தனர். கௌசல்யாவும் தனது பெண்ணின் பெயரை குடுக்க , வித்யா அங்கே வந்து சேர்ந்தாள். மீண்டும் அவளை அவமானப்படுத்தி அவளது பெயரை அளித்துவிட்டு சென்றனர்.

தங்களது உத்தரவை மீறி அம்மாவும் பொண்ணும் அங்க வந்துஇருக்கீங்க.. நீங்க இன்னிக்கு நைட் முழுக்க , உள்ளேயே இருங்க என்று பழைய ஸ்டோர் ரூமில் இருவரையும் அடைத்து வைத்தாள் ஹேமா.



கௌசல்யா தனது மகளிடம் என்னை மன்னித்துவிடுமா , நான் இவர்களை நம்பிஏமாந்துவிட்டேன்.. " என்று அழுக, " விடுமா . எனக்கு என்னைக்கும் என்னோட சிவன் எப்பவும் கூட இருப்பாரு " என்று இருவரும் படுத்துஇருந்தனர்.

இரவில் , கௌசல்யாவிற்கு காய்ச்சல் எடுக்க , என்ன செய்வதென்று தெரியாமல் , மூடியிருந்த கதவுகளை தட்டி அனைவரையும் எழுப்ப முயற்சிக்கிறாள். ஆனால் யாரும் அவளை கண்டுகொள்ளாமல் தங்களது தூக்கத்தை தொடர்ந்தனர்.

அதே நேரம் , பூசாரி பெண்களின் பெயர்களை அரண்மனை வீடு ஆட்களிடம் குடுக்க , "என்னோட சகபத்தினி கிட்ட குடுங்க ஐயரே .." என்று கூறினார் ராகவ் பிரதாப் சிங்.

அதை அவருடைய மனைவி வாங்கி பார்த்துவிட்டு , " ஏன் இந்த ஒரு பேர் மட்டும் பாதில அடிச்சுயிருக்கு " என்று கேட்டார் உமா பிரதாப் சிங்.

" அந்த பொண்ணு பொருத்தமில்லை அம்மா " என்றார் பூசாரி .

"பொருத்தம் இருக்க , இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது ஐயரே.. அதை அந்த சிவன் தான் முடிவு செய்ய வேண்டும். ""அதுவும் சரிதான் ஐயா "

அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு காற்றினால் ஜன்னல்கள் அடித்துக்கொண்டு இருக்க ,அதை சாத்திவிட்டு விளக்கின் வெளிச்சத்தில் அந்த பெயரை எதேர்சையாக பார்க்க , அடித்துஇருந்த இடம் ஓரளவிற்கு தெளிவாக தெரிந்தது.

அதில் வித்யா என்று இருக்க , இவரும் வித்யா என்று கூறினார்.

வித்யாவின் வீட்டில் , யாரும் கதவை திறக்காததால் , வித்யா ஜன்னல் ஏறி குதித்து வெளியே சென்றாள்..

ஹாஸ்பிடல் சென்று மருந்து வாங்கிவிட்டு வெளியே வரும்போது மழை பிடித்துவிட , இவள் ஓடி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தாள். அப்போது சில பேர் அவளை சூழ்ந்து வம்பிழுத்து கொண்டு இருக்க , அவர்களின் தலைவன் ராஜா வித்யாவை நெருங்கி நெருங்கி கொண்டு இருந்தான்..
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum